விழுப்புரம்; தமிழ்நாடு கிராம வங்கி கிளைகள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க தரமான கையுறை, முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க கோரி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு கிராம வங்கி விழுப்புரம் மண்டல அலுவலகம் முன்பு சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மத்திய செயற்குழு உறுப்பினர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோசியேஷன் வட்டார செயலாளர் சிவசங்கரன், வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் உதவி பொருளாளர் சீனுவாசன், உதவி தலைவர் பழனிசாமி பங்கேற்ற பேசினர். செயற்குழு உறுப்பினர் ரோத்தீஸ்வரன் உட்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.கொரோனா தொற்றால் இறந்த ஊழியர் சீனுவாசன் குடும்பத்திற்கு உழவன் இழப்பீடு வழங்க வேண்டும். கிளைகள் மற்றும் மண்டல நிர்வாகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தொற்று பரவாமல் இருக்க தரமான கையுறை, முககவசம், கிருமி நாசினி வழங்கவேண்டும். நோய் பரவாமல் தடுக்க 50 சதவீத ஊழியர்களுக்கு விதிமுறைகளை மீறி பணிச்சுமை அதிகரிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆபிஸர்ஸ் அசோசியேஷன் உதவி தலைவர் முருகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE