பொது செய்தி

தமிழ்நாடு

கஷ்டங்கள் கடந்து போகும்! குழந்தைகளுக்கு மன அழுத்தம் தவிர்க்க பெற்றோர் சொல்லணும்!

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 கஷ்டங்கள் கடந்து போகும்! குழந்தைகளுக்கு மன அழுத்தம் தவிர்க்க பெற்றோர் சொல்லணும்!

கோவை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம், வேகமெடுக்க துவங்கியுள்ளது. இச்சமயத்தில், அரசின் விதிமுறைகளை பின்பற்றி, சற்று கவனமாக இருப்பவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும். அலட்சியம் சற்று இருந்தாலும், நம் வீட்டு வாசல் கதவை விரைவில் தட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இப்படி விதிமுறைகளை பின்பற்றி, கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், மூன்று மாதங்களாக வீட்டிலேயே, அடைப்பட்டுக் கிடக்கும் குழந்தைகளை, கட்டுப்படுத்தும் வழிதான் தெரியவில்லை என முழிக்கின்றனர் பெற்றோர்.
மறந்து விடும் 'மாஸ்க்''எவ்வளவு நேரம்தான் 'டிவி' பார்க்கறது...வீடியோ கேம் விளையாடறது...' என்று சலித்துக்கொள்ளும்போது, அவர்களின் கோரிக்கையிலும் நியாயம் இருப்பதை உணர்கின்றனர்.
வேறு வழியின்றி ஒரு கட்டத்தில், 'பத்திரமா விளையாடணும்...யாரையும் தொடாம விளையாடணும்' என்றெல்லாம் கண்டிஷன் பல போட்டு, வெளியே குழந்தைகளுடன் விளையாட அனுப்புகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு 'மாஸ்க்' போட தவறி விடுகின்றனர்.இதனால், ஒரு தெருவின், ஒரு வீட்டில் உள்ள வைரஸ் தொற்று, குழு விளையாட்டுக்களால் எளிதாக, அனைத்து இடங்களிலும் பரவி விடும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
மறுபுறம், வீட்டிலேயே அடைத்து வைத்தால், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்கின்றனர், மனநல ஆலோசகர்கள்.இது குறித்து, மனநல ஆலோசகர் மகேஷ் கூறியதாவது: பிள்ளைகளை வீட்டுக்குள், ரொம்ப நாட்களுக்கு அடைத்து வைப்பது, இயலாத காரியம் தான். பள்ளிகள் மூடல், ஓடி விளையாட முடியாதது ஆகிய இந்த சூழல், அவர்களை கடும் மன அழுத்தத்துக்கு தள்ளும்.
இந்த சூழலில் இருந்து அவர்களை மீட்பது, பெற்றோர் கைகளில்தான் உள்ளது. பாட்டு போட்டி, ஓவியம், நடனம் என ஒருவருக்கு ஒருவர் தொட்டுக்கொள்ளாத வகையில், விளையாட அனுமதிக்கலாம். தவறாமல், மாஸ்க் அணிவிக்க வேண்டும்.கை கழுவுதை கண்காணிக்கணும்!வீட்டில் போதுமான இடமில்லாதவர்கள், வாசலில் விளையாட அனுமதிக்கலாம்.
ஒரே வீட்டு குழந்தைகள் என்றால், மொட்டை மாடிக்கு கூட்டிச் சென்று விளையாட வைக்கலாம்.அல்லது, குழந்தைகளுக்காக சிறிது நேரம் ஒதுக்கி, அவர்களுடன் நண்பர்கள் போன்று அவர்கள் விரும்பும் விளையாட்டை விளையாட வேண்டும். ஒரே பொம்மை அல்லது விளையாட்டு பொருட்களை, பலர் தொட்டு விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.
மாஸ்க் அணிவதையும், அடிக்கடி கை கழுவுவதையும் கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும்.எதிர்காலம் குறித்த நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்லலாம். இது போன்ற இடர்கள் பல வாழ்க்கையில் வரும்; போகும் என்பதை தெளிவுப்படுத்தி நம்பிக்கையூட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X