இந்தியா

ஊழியர்களுக்கு கொரோனா

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பொதுப்பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட அலுவலகம் மூடப்பட்டுள்ளது.பொதுப்பணித் துறையின் பொது சுகாதாரக் கோட்ட அலுவலகம் உப்பளம் சோனாம்பாளையத்தில் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் பொது சுகாதாரக் கோட்டம் ஈடுபட்டுள்ளது.இந்த அலுவலகத்தில் பணியாற்றும் எம்.டி.எஸ்., ஊழியர் ஒருவருக்கும், மேல்நிலை எழுத்தருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, பொதுப்பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட அலுவலகம் இன்றும், நாளையும் (செவ்வாய், புதன்) இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X