சென்னை : 'நடிகை விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான, சீமான் மற்றும் அவரது ஆதரவாளர் ஹரி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவரான இவர், 'ஆன்லைன்' வாயிலாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நேற்று அனுப்பியுள்ள புகார்: சில தினங்களாக, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நடிகை விஜயலட்சுமி வெளியிட்டு உள்ள, 'வீடியோ'க்கள் பரவி வருகின்றன. அதில், விஜயலட்சுமி, 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு திருமண ஆசை காட்டி, பாலியல் உறவு கொண்ட பின், ஏமாற்றி விட்டார்.
அவர் மீது, புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' எனக் கூறியுள்ளார்.இந்த வீடியோக்களுக்கு, சீமான் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அவருக்கு ஆதரவாக, பனங்காட்டு படை என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், 'விஜய லட்சுமியின் நாக்கை அறுத்து விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாகவும், அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட காரணமாக இருந்த சீமான், ஹரி நாடார் ஆகியோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE