இந்தியா

இருவருக்கு கத்தி வெட்டு: போலீசார் வலை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; இருவரை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.அரியாங்குப்பம், கோட்டைமேடு காமராஜ் வீதியை சேர்ந்தவர் கணபதி மகன் சரவணன்,28; அதே பகுதியில் கறிக்கடை வைத்துள்ளார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் தனது நண்பர் முத்தமிழன்,20; என்பவருடன் அரியாங்குப்பம் மெயின்ரோட்டில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எஸ்.பி.ஐ., வங்கி அருகே இரண்டு பைக்குகளுடன் நின்றிருந்த நான்கு பேர் முறைத்தனர். அதனை சரவணனும் முத்தமிழனும் தட்டிக் கேட்டனர்.ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து, சரவணன், முத்தமிழன் இருவரையும் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த இருவரையும், அவ்வழியே வந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் நான்கு பேரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X