பொது செய்தி

தமிழ்நாடு

படிப்படியாக குறையுது கொரோனா: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
TNCoronaUpdates,TNHealth,TNFightsCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,StayHome, Quarantine,lockdown

சென்னை : ''தமிழகத்தில், கொரோனா நோயின் பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

சென்னையில் உள்ள, 'எம்.ஜி.எம்., ஹெல்த் கேர்' மருத்துவமனையில், ரஷ்யாவைச் சேர்ந்த, 3 வயது சிறுவனுக்கு, 'பைவென்ரிகுலர் பெர்லின் ஹார்ட் இம்பிளான்டேசன்' என்ற, இதய அறுவை சிகிச்சை முறையில், முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். அந்த மருத்துவர்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது: ரஷ்யாவைச் சேர்ந்த, 3 வயது சிறுவனுக்கு, மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சை அளித்து, தமிழகத்தின் பெருமையை, உலக சுகாதார வரைபடத்திற்கு எடுத்துச் சென்ற, இந்த மருத்துவமனைக்கு என் பாராட்டுகள்.கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கி, உயிரிழப்பு ஏற்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கத்திலிருந்து, மக்களை மீட்க, எது சரியான பாதையோ, அதை தேர்ந்தெடுத்து, சரியான வழிமுறைகளை, எந்தவிதமான அச்சமுமின்றி, அரசு எடுத்து வருகிறது. இதன் காரணமாக, நோயால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட, குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, இந்த நோயின் பாதிப்பு, தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதை காட்டுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


சிகிச்சை அளித்தது எப்படி?


மருத்துவமனையின், 'கார்டியாக் சயின்ஸ்' பிரிவு இயக்குனர் பாலகிருஷ்ணன் தலைமையில், துணை இயக்குனர் சுரேஷ் ராவ், டாக்டர்கள் ஸ்ரீநாத், கணபதி ஆகியோர், ரஷ்ய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

ஏழு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை குறித்து, டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: சிறுவனின் இதயத்தில், இடது, வலது கீழ்புற பம்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால், 'இம்பிளான்டபிள் வென்ட்ரிகுலார்' எனப்படும், ரத்தத்தை உந்தி செலுத்தும் செயற்கை பம்புகள் பொருத்துவது சவாலாக இருந்தது. சிகிச்சையின் போது, சிறுவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது.

மேலும், இதயம் துடிப்பதை நிறுத்தியதால், அதை மீண்டும் துடிக்க வைக்க, நீண்ட போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுப்பதும் சவாலாக இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அறுவை சிகிச்சை நிபுணர்களின் வழிகாட்டுதல்படி, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. ஆச்சரியப்படும் வகையில், சிறுவன் வேகமாக மீண்டான்.

இது போன்ற சிறிய அளவிலான, ரத்தத்தை உந்தி செலுத்தும் பம்புகள் அறுவை சிகிச்சை, தெற்காசியா, தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் எங்கும் நடந்தது இல்லை. முதன் முறையாக, சென்னையில் நடந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selliah Sivasubramaniam - jaffna,இலங்கை
28-ஜூலை-202021:30:54 IST Report Abuse
Selliah Sivasubramaniam ஸ்ரீனிவாஸ் அவர்களே கொரோனா பரவுவதட்கு முழு காரணமும் மக்கள் தான் . அரசு அல்ல. ஆரம்பத்திலேயே அரசு விதி முறைகளை பின்பற்றியிருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்காது. மக்கள் விழிப்பாக இல்லா விட்டால் எடப்பாடி என்ன எவராலும் காப்பாற்ற முடியாது. இதை புரிந்து கொள்ளாததால் விளைவு தான் இப்போ. ஊரடங்கு சட்டம் போட்டால் அதை மதிக்க வேண்டியது மக்கள் கடமை. அனால் ஊடகங்களும் மாற்று கட்சிகளும் பொறுப்பற்ற விதமாக நடப்பதால் இப்போதைக்கு மீட்சிக்கு வழி இல்லை.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202021:04:50 IST Report Abuse
oce என் முந்தைய கருத்து பதிவு சென்னை சீனிவாசன் என்பவரை சாரும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூலை-202021:00:28 IST Report Abuse
oce அரசை நடத்த லாயக்கற்ற கும்பல் என்று கூறும் விடியாத முடியாத நபர் லாயக்கான கும்பலை எது என்று சொன்னால் அவரது அறிவுக்கான சான்றாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X