சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்டு அமெரிக்கா அதிரடி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பீஜிங் : சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா - சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூடியது. இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, 'பி - 8ஏ' மற்றும் 'இ.பி. - 3இ' ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன் தினம் நுழைந்தது.

சீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்தன. 'சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை' என, கூறப்படுகிறது.இதுகுறித்து, ஹாங்காங்கை சேர்ந்த, ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன.----------------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X