இந்தியா

ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம்: கிராமப்புற கல்வி குழு அரசுக்கு கோரிக்கை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

பர்கூர்: கொரோனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை மக்களது, பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என கிராமப்புற கல்வி கண்காணிப்பு குழு வலியுறுத்தி உள்ளது. இது குறித்து குழுவின் தலைவர் மஞ்சினி விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லுாரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் உள்ளது. ஆனால், தற்போது, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் பருவ கட்டணத்தை செலுத்தி, பாட புத்தகங்களை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு, தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுத்து வருகிறது.வசதி உள்ள சிலர், கல்வி கட்டணத்தை செலுத்தி, பாட புத்தகங்களை பெற்று கொண்டு, லேப்டாப், ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலமாக ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வறுமையில் உள்ள ஏழை மாணவர்களின், கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனாவால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும், ஏழை மக்களது, பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்று கொண்டு, ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான ஆன்ராய்டு மொபைல் போன், உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X