இந்தியா

உள்ளாட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

காரைக்கால்; உள்ளாட்சி ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி ஊழியர் சங்க தலைவர் சண்முகராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும்.கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X