பொது செய்தி

தமிழ்நாடு

'மனதை உருக்கும் திருவாசகம்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையம் சார்பில், 'திருவாசகம் எனும் தேன்' என்ற தலைப்பில், இணைய வழி நல்லுரை வழங்கப்பட்டது.கோவையை சேர்ந்த சைவ சித்தாந்தப் பேராசிரியர் சிவசண்முகம் பேசுகையில், ''படிப்பவர் மனதை உருக்கும் பக்தி நுால் திருவாசகம். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் படிப்போர் மனதை செம்மைப்படுத்தி, வாழ்வில் உயரச்செய்யும். தேன் தானும் கெடாது; தன்னில் விழுந்த பொருளும் கெடாமல் பாதுகாக்கும் தன்மையுடையது. அதேபோல், திருவாசகம் எனும் தேன், காலத்தால் அழியாமல், அதை படிப்பவர்களுக்கும் நன்மை தருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X