சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் ஒப்பந்த நர்ஸ்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து, டி.எம்.எஸ்., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் பாதிப்பும், இறப்பும் அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா தடுப்பு பணிகளுக்காக, டாக்டர்கள், நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், 50க்கும் மேற்பட்ட நர்ஸ்கள், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, நர்ஸ்கள் கூறியதாவது:மூன்று மாதங்களாக, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகிறோம். முதலில், நிரந்தர பணி என்றனர்;
தற்போது, ஒப்பந்த பணி என்கின்றனர். மூன்று மாதங்களாக சம்பளமும் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்.அதிகாரிகள் சொன்னபடி, எங்களை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement