இலவச மின்சாரம் ரத்தா: விவசாயிகள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச மின்சாரம் ரத்தா: விவசாயிகள் போராட்டம்

Added : ஜூலை 27, 2020
Share
சூலூர்:இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூலூர் வட்டாரத்தில், விவசாயிகள் கருப்பு கொடி கட்டி, போராட்டம் நடத்தினர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மின் சட்ட திருத்தம் 2020ல், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய உள்ளதாக, எழுந்த தகவலுக்கு, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கட்சி சார்பற்ற

சூலூர்:இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூலூர் வட்டாரத்தில், விவசாயிகள் கருப்பு கொடி கட்டி, போராட்டம் நடத்தினர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மின் சட்ட திருத்தம் 2020ல், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய உள்ளதாக, எழுந்த தகவலுக்கு, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், கருப்பு கொடி போராட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் தங்கள் வீடுகள், தோட்டங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X