பொது செய்தி

தமிழ்நாடு

பணப்பலன் பெறாமலே, 118 ஓய்வூதியர் மறைவு: தீர்வு காணாமலே போராட்டம் வெற்றியாம்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தில், பணப்பலன்கள் பற்றிய குரல் ஓங்காதது ஏமாற்றம் அளிப்பதாக, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் புலம்புகின்றனர்.ஊதிய விஷயத்தில் அரசாணையின் வழி காட்டுதலுக்கு மாறாக, அதிகாரிகள் செயல்படுவதாகக்கூறி, போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், சென்னையில் கடந்த, 24ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, தொழில்நுட்ப ஊழியர்கள் வேலைபார்ப்பது முறைப்படுத்தப்படும், 'இன்சென்டிவ்', 'ஷிப்ட் அலவன்ஸ்' வழங்கப்படும், சிறப்பு விடுப்பு வழங்குவது உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டதாகக்கூறி, போராட்டம் கைவிடப்பட்டது. ஓய்வூதியர்களின் முக்கிய கோரிக்கை அங்கு ஒலிக்காதது, ஏமாற்றம் அளிப்பதாக ஓய்வூதியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கூறியதாவது:போக்குவரத்துக்கழகத்தில், 2019ம் ஆண்டு ஏப்., மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்ற, இறந்து போன தொழிலாளர்கள் என, 6,221 பேருக்கு வருங்கால வைப்பு நிதி உட்பட அனைத்தும் சேர்த்து, 1,625.78 கோடி ரூபாய் பணப்பலன்கள், இதுவரை கிடைக்கவில்லை.கூட்டமைப்பு சுற்றறிக்கையில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பணப்பலன்களை வழங்குவது தொடர்பாக, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணப்பலன்கள் பெறாமலே, கடந்தாண்டு முதல் கோவையில், 118 பேர் இறந்துள்ளனர். எங்களின் முக்கிய கோரிக்கையான, பணப்பலன்களை சிறிது கூட பெற்றுத்தராமல், போராட்டம் வெற்றி பெற்றதாக தெரிவிப்பது, வேதனை அளிக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.அழுத்தம் தரப்படும்!போராட்டத்தில் அங்கம் வகித்த அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யு.சி., சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகம் கூறுகையில்,''போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகிய இரு தரப்பினரின் கோரிக்கைகளையும்தான், அரசிடம் முன்வைத்து வருகிறோம். கொரோனா சமயத்தில் ஊழியர்களின் சம்பளம், வருகை பதிவு உள்ளிட்ட விஷயங்களில், அரசு உடனடி முடிவு எடுத்தது. விரைவில் போக்குவரத்து செயலரை சந்தித்து, ஓய்வூதியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் அழுத்தம் தரப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X