இந்தியா

புதுச்சேரியில் விரைவில் விரைவில் தாமரைப் புரட்சி

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் விரைவில் தாமரை புரட்சி நடக்கும் என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த பட்ஜெட், நல்லது செய்வதாக கண்ணாமூச்சி காட்டிவிட்டு முழுமையாக ஏமாற்றிவிட்டது. முதல்வர் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் அரசு பொதுத்துறை ஊழியர்களின் சம்பளம் பிரச்னை மற்றும் விஜயன் கமிட்டி அறிக்கை குறித்த எந்த தகவலும் இல்லை.ஏ.எப்.டி., பாரதி, சுதேசி மில்கள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடும் வேலையை திறம்பட செய்து கொண்டு இருக்கிறது.காங்., ஆட்சியில் உருவாக்கிய பாப்ஸ்கோ, கே.வி.கே., அமுதசுரபி, ஸ்பின்கோ, பாசிக், பான்பேப், பாண்டெக்ஸ் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சம்பளமின்றி வறுமையில் துன்பப்படுகிறார்கள்.செயல்படாத காங்., அரசு கவர்னர் மீதும், மத்திய அரசின் மீதும் பழியை போட்டு தப்பித்துக் கொள்ள ஒரு நாடகம் ஆடுகின்றது. தற்போது கொரேனா காலம் என்பதால். தொற்றுநோய் மீது பழியை போட்டு மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.ஒட்டுமொத்த மக்கள் விரோத அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டால், மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. வறுமை மட்டும்தான் இருக்கிறது.இந்த காங்., ஆட்சி மக்களுக்கு எப்போதும் தேவையில்லை. மக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் தாமரை புரட்சி விரைவில் நடக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X