கோவையில் அத்லெடிக் பயிற்சி அனுமதி கிடைத்தது எப்படி?| Dinamalar

தமிழ்நாடு

கோவையில் 'அத்லெடிக்' பயிற்சி அனுமதி கிடைத்தது எப்படி?

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 27, 2020
Share
 கோவையில் 'அத்லெடிக்' பயிற்சி  அனுமதி கிடைத்தது எப்படி?

கோவை:சர்வதேச போட்டிக்கு தயாராகும் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே, கோவை நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெற அனுமதி கிடைத்துள்ளது.
இது போல் தகுதி வாய்ந்த, மீதமுள்ளவர்களையும் அனுமதிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, விளையாட்டு போட்டிகள் நடத்தவும், பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்களுக்கு மட்டும், தமிழக அரசு பயிற்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கோவை மத்திய சுங்கத்துறையில் பணிபுரியும் முகமது சலாவூதீன், ரயில்வே துறையில் பணியாற்றும் சிவ அன்பரசி, ஆகிய இருவரும் சர்வதேச தடகள வீரர்கள் என்பதால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரிடம், கட்டுப்பாடுகளுடன் பயிற்சி பெற அனுமதி கேட்டனர். தேவையான சான்றிதழ்கள் சமர்ப்பித்த பிறகு, இருவருக்கும் கோவை, நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
இவர்களை தொடர்ந்து, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களும், பயிற்சி பெற அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றனர். நேபாளத்தில் நடந்த தெற்காசிய போட்டியில், இந்திய அணியில் இடம் பிடித்து, மும்முறை தாண்டுதல் போட்டியில் நான்காமிடம் பிடித்தேன். 'கொரோனா' காரணமாக, 80 நாட்களுக்கு மேல் பயிற்சி பெற முடியாமல் போனது.
ஆகையால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றேன். இது போல், தகுதி வாய்ந்த வீரர்கள், பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்.-சிவஅன்பரசி,சர்வதேச தடகள வீராங்கனை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X