இந்தியா

புதுச்சேரியில் 2,872 பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று மூதாட்டி உள்ளிட்ட மூவர் கொரோனா தொற்று காரணமாக இறந்தனர். இதனால், மாநிலத்தின் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரில் நேற்று 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 86 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 53 பேர் கதிர்காமம் கோவிட் மருத்துவமனையிலும், 33 பேர் ஜிப்மரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கதிர்காமம் கோவிட் மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட கொசப்பாளையம், கோவிந்தா நகரை சேர்ந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இதேபோன்று ஜிப்மர் மருத்துவமனையில் கொரோன தொற்று காரணமாக கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்ட முத்தியால்பேட்டையை சேர்ந்த 47 வயது ஆண் நபர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்ட மூலக்குளத்தை சேர்ந்த 65 வயது முதியவர் நேற்று காலை இறந்தார். இறந்த மூவரும், நீரிழிவு, தைராய்டு, புற்று நோய், நுரையீரல் வீக்கம், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.5 சதவீதமாகும்.மாநிலத்தில் 2,872 பேர் கொரோனா தொற்றால் பாதித்த போதிலும், அவர்களில் 1,720 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், புதுச்சேரியில் 103 பேர், ஏனாமில் 10 பேர் என 113 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் இதுவரை 35,704 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 32,291 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 309 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X