போலீஸ் கந்தசாமி வீதியில் கொசு தொழிற்சாலை!| Dinamalar

போலீஸ் கந்தசாமி வீதியில் கொசு தொழிற்சாலை!

Added : ஜூலை 27, 2020
Share

பல நாள் சாக்கடை அடைப்பால் மக்கள் கவலை

பாலத்தை சீரமைக்கணும்சிங்காநல்லுார் - வெள்ளலுார் சாலையில் உள்ள, தரைப்பாலம் சிதிலமடைந்துள்ளது. இப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.- யுவராஜ், வெள்ளாளபாளையம்.

போக்குவரத்து இடையூறுபுலியகுளம், தாமு நகர், அலமேலு மங்கம்மாள் லே-அவுட், முதல் வீதியில், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள, கட்டட கழிவுகள் மற்றும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.- வெங்கடசுப்பு, தாமு நகர்.

சாலையை சீரமைக்கணும்கணபதி, உடையாம்பாளையம், லட்சுமி நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட, சாலை, பணி முடிந்தபின், முறையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.- தினேஷ், லட்சுமி நகர்.

சாய்ந்த நிலையில் மின் கம்பம்இருகூர், சிவசக்தி நகர், சாமியார் மேடை அருகில் உள்ள, மின் கம்பம்(எண்: 195) சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை சீராக்க வேண்டும்.- அரசு, சிவசக்தி நகர்.

நாய் தொல்லை அதிகம்பொள்ளாச்சி ரோடு, சீரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, போடிபாளையம், மாதவி அவென்யூவில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.- ராமசாமி, மாதவி அவென்யூ.

விளக்கு எரிவதில்லைசாய்பாபாகாலனி, சின்னப்பன் வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த 3 மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ரகுநாதன், சின்னப்பன் வீதி.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்மாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, ஆவாரம்பாளையம், தெற்கு வீதி 1ல், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. இக்கால்வாயை துார் வார வேண்டும்.- சந்திரசேகர், ஆவாரம்பாளையம்.

சாக்கடை கால்வாயை சீரமைக்கணும்போத்தனுார், நஞ்சுண்டாபுரம் ரோடு, அம்மன் நகரில், சாக்கடை கால்வாய் தடுப்பு சுவர்கள் சிதிலமடைந்துள்ளதால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும்.- ரவி, அம்மன் நகர்.

சுகாதார சீர்கேடுபுலியகுளம், போலீஸ் கந்தசாமி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சேகர், புலியகுளம்.

மின் கம்பத்தை மாற்றணும்வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், பெரியார் நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 8 6 2013), சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- மோகன், பெரியார் நகர்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 95வது வார்டுக்கு உட்பட்ட, ஆத்துப்பாலம் - பொள்ளாச்சி ரோடு, காயிதேமில்லத் காலனி இரண்டாவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- கமலம், ஆத்துப்பாலம்.

சாக்கடை கால்வாய் வசதியில்லைஅன்னுார், மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட, நாகம்மாபுதுார் பகுதியில், சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நவீன், நாகம்மாபுதுார்.

குடிநீர் தட்டுப்பாடுமாநகராட்சி, 49வது வார்டுக்கு உட்பட்ட, ரத்தினபுரியில், 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால், தட்டுப்பாடு நிலவுகிறது.- ராஜாமுகம்மது, ரத்தினபுரி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X