பொது செய்தி

தமிழ்நாடு

நோயாளியுடன் ஒருவர் வந்தா போதும்!

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:'அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, நோயாளியுடன், தேவைப்பட்டால் மட்டும், ஒருவர் வரலாம்,' என்று டாக்டர்கள் கூறினர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு, ஊரடங்குத் தளர்வுக்குப் பின், அதிகளவில், நோயாளிகள் வருகின்றனர்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:நோயாளிகளுடன் வருவோர், கூடுதலாக உள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள், நோயாளிகளுடன் தங்கும் நிலை உள்ளது. நோயாளியுடன் ஒருவர் மட்டும் வரலாம். நோயாளிகளும், அவசியம் இன்றி, மருத்துவமனைகளுக்கு வர வேண்டாம். கூடுதல் நபர்கள் வருவதால், தொற்று அபாயம் அதிகரிக்கிறது.கொரோனா நோயாளி களைக் கவனிப்பதில், மருத்துவக்குழுவினர் பெரும்பாலானோர், ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், பிற நோயாளிகள், தங்களை கவனிக்கவில்லை என்று, குற்றஞ் சாட்டுகின்றனர். பிற நோயாளிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X