'பி.எம்., கேர்ஸ்' நிதி மாற்றம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி திரட்டப்பட்ட, 'பி.எம்., கேர்ஸ்' நிதியை, தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு மாற்றக் கோரிய மனு மீதான உத்தரவை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடியால் துவக்கப்பட்ட, 'பி.எம்., கேர்ஸ்' நிதியத்திற்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில், ஏராளமாக நிதி வழங்கப்பட்டது. இத்தொகையை, என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்பு நிதியில் சேர்க்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சமூக நல அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: தன்னார்வலர்கள், சுய விருப்பின் அடிப்படையில், பொது அறக்கட்டளையான பி.எம்., கேர்ஸ் நிதியத்திற்கு, தொகை வழங்கியுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்கு, பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும் நிதியில் கை வைக்கவில்லை. இது போன்ற பேரழிவுகளுக்கான நிதியம் தொடர்பாக, நிலையான திட்டத்தை வைத்திருக்க முடியாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல், அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியதாவது: கொரோனாவுக்கான, பி.எம்., கேர்ஸ் நிதியின் கணக்குகள், தனியாரால் தணிக்கை செய்யப்படும் என, மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், தேசிய பேரிடர் மீட்பு நிதியை, ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை செய்கிறார்.நாங்கள், யாருடைய நேர்மை மற்றும் நம்பிக்கையையும் சந்தேகிக்க வில்லை. அதேவேளையில், பி.எம்., கேர்ஸ் நிதியத்தை உருவாக்கியது, பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதுடன், அரசியலமைப்பின் மோசடியாகவே கருதுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியதாவது:பல்வேறு தரப்பில் இருந்தும், பி.எம்., கேர்ஸ் நிதியத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதிலிருந்து மாநிலங்களுக்கு உதவித்தொகை வழங்க மறுக்கின்றனர். எனவே, இதை ஒரு தீவிர பிரச்னையாக, கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வழக்கறிஞர்களின் வாதங்களை தொடர்ந்து, மனு மீதான உத்தரவை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X