பொது செய்தி

இந்தியா

மேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : சீனாவில் இருந்து செயல்படும், 59 மொபைல் செயலிகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக, 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250 செயலிகளின் பட்டியலும், தயாராகி வருவதாக தெரிகிறது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோதலாக மாறியது. எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
chinese apps, banned, India

புதுடில்லி : சீனாவில் இருந்து செயல்படும், 59 மொபைல் செயலிகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக, 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250 செயலிகளின் பட்டியலும், தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோதலாக மாறியது. எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

சீனாவைச் சேர்ந்த, மொபைல் செயலிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், தகவல்கள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, 'டிக்டாக்' உட்பட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, மேலும், 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட செயலிகளின் மறுவடிவமாக இருந்தவை. இது குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவற்றைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட செயலிகள் குறித்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், இவற்றுக்கும் தடை விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஜூலை-202023:25:15 IST Report Abuse
தத்வமசி தட்ட வேண்டிய இடத்தில் தட்டினால் சப்ப மூக்கன் தானாக காணாமல் போகிறான்.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
28-ஜூலை-202015:19:17 IST Report Abuse
krishna முடியாத விடியாதவன் கதறியாச்சு. நம்ம ஆப்பு எங்க கதரகனும். ஆப்பு விற்க்கே ஆப்பு வெச்சுட்டாங்களா.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
28-ஜூலை-202009:10:40 IST Report Abuse
kosu moolai என்னங்க அடுத்து ...ஒளிச்சி வச்சிட்டீங்க.
Rate this:
தத்வமசி - சென்னை ,இந்தியா
28-ஜூலை-202023:25:44 IST Report Abuse
தத்வமசி உன் அப்பனோட பொக்கைவாய் பல்லு. தேடி கண்டுபிடி....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X