அரசியல் செய்தி

தமிழ்நாடு

3,501 நகரும் ரேஷன் கடைகள் விரைவில் துவக்கம்: ராஜு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

சென்னை : -''தமிழகத்தில் விரைவில், 3,501 நகரும் ரேஷன் கடைகள் துவக்கப்படும்,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை செயல்பாடுகள் தொடர்பாக, அமைச்சர் ராஜு, அந்த துறையின் உயரதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வீடுகளுக்கு அருகிலேயே, ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் வகையில், 3,501 'அம்மா' நகரும் ரேஷன் கடைகளை, 9.66 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும் என, ஏற்கனவே, முதல்வர் அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அந்த கடைகள் விரைவில் துவக்கப்படும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் இம்மாதம், 15ம் தேதி வரை, 1.39 லட்சம் விவசாயிகளுக்கு, 1,101 கோடி ரூபாய்க்கு, பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.அதில், டெல்டா மாவட்டங்களில் உள்ள, 10 ஆயிரத்து, 583 விவசாயிகளுக்கு, 78 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.இனி வரும் காலங்களில், விவசாயிகளின் நலன் கருதி, விற்பனை முனைய கருவிகள் வாயிலாக, அந்தந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலேயே பயிர் கடன்கள் வழங்கப்படும் என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, மாநில தொடக்க கூட்டுறவு வங்கியின், அனைத்து பணியாளர் சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவதாக உறுதி அளித்தனர்.இதுவரை, கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் எடுக்கும் வகையில், 7.70 லட்சம், 'ரூபே கிசான் கார்டுகள், இன்ஸ்டா கார்டுகள்' வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X