அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 கொடுங்க: திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்

Updated : ஜூலை 29, 2020 | Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை : கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டணி கட்சிகள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு
DMK, Stalin, MK Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாக தோல்விகள் குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று கூட்டணி கட்சிகள் கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

*கொரோனா பேரிடரிலிருந்து பாதுகாத்திட குறிப்பாக மாவட்டங்களிலும் கிராமங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்க வேண்டும்

*மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை ரத்து செய்து மீதித் தொகையை எளிய தவணைகளில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் பணம் வழங்க வேண்டும்

*அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முழு அதிகாரத்தையும் அளிக்க வேண்டும்

*பிற்படுத்தப்பட்டோர் பட்டியலினத்தோர் பழங்குடியினர் இட ஒதுக்கீடுகளை முழு வீச்சில் செயல்படுத்த தனியாக கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்

*கருத்து சுதந்திரத்தை பேணி பாதுகாத்திட அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தி.மு.க. - கான்ஸ்டன்டைன் ரவீந்தீரன், காங்கிரஸ் - கோபண்ணா, ம.தி.மு.க. - மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் - கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் - மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார், முஸ்லிம் லீக் - அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி - அப்துல் சமர், கொ.ம.தே.க. - சூர்யமூர்த்தி, ஐ.ஜே.கே. - ஜெயசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

* மருத்துவ கல்விக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறும் அரசியல் சட்ட உரிமை உள்ளது என சென்னை உய ர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு பாராட்டுக்குரியது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-202020:49:27 IST Report Abuse
babu Nalla yosanai , appidiye Rs 5000 DMK ara katalai kudukkumnu sollidinga boss
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
30-ஜூலை-202018:44:50 IST Report Abuse
Tamilnesan ஆமாங்க....அப்போ தான் பாலு, கனிமொழி, ஜகத்ராட்ஷகன் மற்றும் பலர் நடத்தும் திமுக சாராய ஆலைகள் கஜானா நிரம்பும். பொது மக்கள் ஐந்தாயிரம் ருபாய் பணத்தை டாஸ்மாக் கடைக்கு கொடுத்துவிட்டு அடுத்த மாதம் இன்னும் யார் பணம் தருவார்கள் என்று நிற்பார்கள். தொழிற்சாலை, விவசாயத்திற்கு பணம் கொடுக்காதீர்கள். யாருக்கும் வேலை மற்றும் ஊதியம் கொடுக்காமல் ஐந்தாயிரம் ருபாய் பணத்தை உடனே கொடுத்து விடுங்கள். சுடலையின் வளர்ப்பு அப்படி. அப்பா டிக்கெட் வாங்காமல் ரயிலில் இலவச பயணம் செய்தவர். பரம்பரை புத்தி அப்படி. பல லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தாலும் இலவசத்திற்கு பரிந்துரை செய்யும் குணம் எங்கே போகும்?
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
28-ஜூலை-202023:13:26 IST Report Abuse
RAJAN தஞ்சை பெரிய கோயில் கட்டிய திமுக, யோவ் சூசை எழுதி குடுக்கற மூதிய மாத்து. அது தஞ்சைல தமிழ் மாநாடு நடத்திய திமுக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X