பாலிவுட்டில் என்னை ஒதுக்கி தள்ளினர்: ரசூல் பூக்குட்டியும் பரபரப்பு குற்றச்சாட்டு

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மும்பை : ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும், ''பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி தள்ளினர்,'' என, பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நெருக்கடிபாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கோலோச்சுவதாகவும், குறிப்பிட்ட சில குடும்பத்தினரை தவிர, வேறு யார் முன்னேற்றத்தையும் இந்த கும்பல் விரும்புவது இல்லை என்றும், நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சமீபத்தில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தார். வாரிசு நடிகர்களின் நெருக்கடி காரணமாகவே, அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், 'பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல், வதந்தி பரப்புகிறது. அதனால் தான், பாலிவுட் வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்கு, சிறப்பாக ஒலிக்கோர்வை செய்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், கேரளாவை சேர்ந்தவருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளதாவது:வாய்ப்புஆஸ்கர் விருது வென்ற பின், எனக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டன. சில தயாரிப்பு நிறுவனங்கள், அவர்களது படங்களில் நான் பணி புரிவதை விரும்பவில்லை. சில தயாரிப்பாளர்கள், என் முகத்துக்கு நேராகவே, 'நீங்கள் எங்களுக்கு தேவையில்லை' என்றனர். பாலிவுட்டிலிருந்து எனக்கு வாய்ப்பு வராததால் நிலைகுலைந்து விட்டேன்.

ஆனால், பிராந்திய மொழி திரைப்படங்களில், எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்காக பணியாற்றுகிறேன். ஆஸ்கர் விருது வென்ற பின், என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து பணியாற்றுவதையே விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-ஜூலை-202007:11:55 IST Report Abuse
natarajan s இதே நிலைமை பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராமுக்கும் இருந்தது, அதனால்தான் அவர்கள் தமிழ்நாட்டில் பாட வந்தார்கள் . இது ஒன்றும் புதிய விஷயமில்லை. சினிமாவில் திறமை, கடின உழைப்பு , தொழில் பக்தி என்பதெல்லாம் சும்மா . ஆள் பலம் வேண்டும் அடுத்து அதிர்ஷ்டம் வேண்டும். 1975 வரை சிவாஜி எம்ஜியார் இவர்களை மீறி எந்த படமும் வெளியிட முடியாது. எம்ஜியார் அரசியல் நுழைவுக்கு பிறகே காலம் மாறியது.இதே நிலைமை கடந்த ஆட்சியிலும் இருந்தது . தங்கள் வாய்ப்பு குறைந்தால் வருத்தம் ஏற்படுவது இயல்பு தான் அதன் வெளிப்பாடுதான் இது. எத்தனையோ திறமை, அழகு இருந்தவர்கள் சோபிக்க முடியாமல் போய் விட்டது காரணம் அதிர்ஷ்டம், அதற்க்கு உதாரணம் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X