பாலிவுட்டில் என்னை ஒதுக்கி தள்ளினர்: ரசூல் பூக்குட்டியும் பரபரப்பு குற்றச்சாட்டு| Dinamalar

பாலிவுட்டில் என்னை ஒதுக்கி தள்ளினர்: ரசூல் பூக்குட்டியும் பரபரப்பு குற்றச்சாட்டு

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
மும்பை : ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும், ''பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி தள்ளினர்,'' என, பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். நெருக்கடிபாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கோலோச்சுவதாகவும், குறிப்பிட்ட சில குடும்பத்தினரை தவிர, வேறு யார் முன்னேற்றத்தையும் இந்த கும்பல் விரும்புவது இல்லை என்றும், நீண்ட

மும்பை : ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும், ''பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு தராமல் ஒதுக்கி தள்ளினர்,'' என, பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

நெருக்கடிபாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கோலோச்சுவதாகவும், குறிப்பிட்ட சில குடும்பத்தினரை தவிர, வேறு யார் முன்னேற்றத்தையும் இந்த கும்பல் விரும்புவது இல்லை என்றும், நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சமீபத்தில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்தார். வாரிசு நடிகர்களின் நெருக்கடி காரணமாகவே, அவர் தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், 'பாலிவுட்டில் எனக்கு எதிராக ஒரு கும்பல், வதந்தி பரப்புகிறது. அதனால் தான், பாலிவுட் வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை' என, கூறியிருந்தார்.

இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் ஆங்கில படத்துக்கு, சிறப்பாக ஒலிக்கோர்வை செய்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், கேரளாவை சேர்ந்தவருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளதாவது:வாய்ப்புஆஸ்கர் விருது வென்ற பின், எனக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டன. சில தயாரிப்பு நிறுவனங்கள், அவர்களது படங்களில் நான் பணி புரிவதை விரும்பவில்லை. சில தயாரிப்பாளர்கள், என் முகத்துக்கு நேராகவே, 'நீங்கள் எங்களுக்கு தேவையில்லை' என்றனர். பாலிவுட்டிலிருந்து எனக்கு வாய்ப்பு வராததால் நிலைகுலைந்து விட்டேன்.

ஆனால், பிராந்திய மொழி திரைப்படங்களில், எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. என் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்காக பணியாற்றுகிறேன். ஆஸ்கர் விருது வென்ற பின், என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். ஆனால், இந்தியாவிலிருந்து பணியாற்றுவதையே விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X