பொது செய்தி

தமிழ்நாடு

'நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்கணும்'

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 'நிலத்துக்கு அதிக இழப்பீடு வழங்கணும்'

திருப்பூர்:கோவை மாவட்டத்தில் வழங்கியது போல், விவசாயிகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டுமென பா.ஜ., சார்பில், வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த மக்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மனுக்கள் பெட்டியில், மனுக்களை அளித்து சென்றனர்.உப்பிலிய நாயக்கர் சமூக சங்கத்தினர், கொடுத்த மனுவில், 'ஜாதியின் பெயரால் கலவரம் செய்ய துாண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி சங்க தலைவர்களை கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஆபாச வார்த்தை பேசுபவர்கள் மீதும், தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்புக்கு ஆதரவாக பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'உயர்மின்கோபுர பணிக்காக, கையகப்படுத்தும் விவசாயி நிலங்களுக்கு, அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். கோவை மாவட்டத்தில் வழங்கியது போல், அதிகபட்ச மதிப்பீட்டுடன், 25 சதவீதத்தை சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.l மாநகராட்சியின், 30வது வார்டு மக்கள் கொடுத்த மனுவில், 'போயம்பாளையத்தில், ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு இயங்கும் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.குழந்தைகள் மற்றும் முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பொது சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.l பச்சையப்பா நகர் நலக்குழுவினர் கொடுத்த மனுவில், 'நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.ஆழ்குழாய் தண்ணீரை முறையாக வினியோகிக்க வேண்டும். மூன்றாவது திட்ட குடிநீர் இணைப்பு வழங்கி, வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X