அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் முக கவசம் இலவச திட்டம் ; துவக்கினார் முதல்வர்

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 ரேஷன் கடைகளில் முக கவசம்  இலவச திட்டம் ;  துவக்கினார் முதல்வர்

சென்னை : -வருவாய் துறை சார்பில், முதல் கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கும், 69.09 லட்சம் குடும்பங்களுக்கு, ரேஷன் கடைகளில், 4.44 கோடி முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

மத்திய அரசின், கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளில், பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும், பொதுமக்கள் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, 'தமிழகத்தில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலவசமாக, தரமான, மறு பயன்பாட்டு முக கவசங்கள் வழங்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள, 2.08 கோடி ரேஷன் அட்டைதாரர்களின், 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், தலா, தரமான, மறு பயன்பாட்டு முக கவசங்கள் இரண்டு, வழங்கப்பட உள்ளன.முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சி தவிர, மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும், 69.09 லட்சம் குடும்பங்களுக்கு, இலவசமாக வழங்க, 4.44 கோடி தரமான மறு பயன்பாட்டு முக கவசங்கள், 30.07 கோடி ரூபாய் மதிப்பில், கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.ரேஷன் கடைகளில், இலவச முக கவசங்கள் வழங்கும் பணி, நேற்று முதல் துவக்கப்பட்டு உள்ளது.

சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று இத்திட்டத்தை துவக்கி வைத்து, இலவச முக கவசங்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், உதயகுமார், தலைமை செயலர் சண்முகம், வருவாய் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X