சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்; விவசாயிகளால் பரபரப்பு

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement
 மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்; விவசாயிகளால் பரபரப்பு

பல்லடம்:இலவச மின்சாரம் திட்டம் தொடர வலியுறுத்தி, பசு மாட்டுடன் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பல்லடம், மற்றும் பொங்கலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து, மின்சார சட்ட திருத்தத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.சித்தம்பலத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பசுமாட்டை முன்னிறுத்தி யும், கருப்புக்கொடி ஏந்தியும் விவசாயிகள் பங்கேற்றனர்.பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் பிரிவு உழவாலயம் அலுவலகத்தின் முன், உழவர் உழைப்பாளர் கட்சியினர் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X