பொது செய்தி

தமிழ்நாடு

எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Added : ஜூலை 27, 2020
Share
Advertisement

கோவை:''பொது இடங்களில், எச்சில் துப்பினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் எச்சரித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 'கொரோனா' பரவல் அதிகரித்து வருகிறது. அதிக பாதிப்பு உள்ள இடங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது. கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் பிரிவு பகுதியில், கிருமி நாசினி தெளிக்கும் பணியை, கமிஷனர் ஷ்ரவன்குமார் நேற்று துவக்கி வைத்தார்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, துாய்மை பணியாளர்களுக்கு ஆயுஸ் குடிநீர் வழங்கினார். அவர்கள் மத்தியில், கமிஷனர் பேசியதாவது:அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். களத்தில், 7,000 ஊழியர்கள் இருக்கின்றனர். நவீன இயந்திரங்கள் வைத்திருக்கிறோம்.வாழ்க்கையில் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டால், எந்த நோயாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம். சமூக இடைவெளி விட்டு, ஏன் நிற்கச் சொல்கிறோம். இன்னொருவரின் எச்சில் நம் மீது விழக்கூடாது; அதன் மீது நோய் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால், அவ்வாறு சொல்கிறோம். பொது இடங்களில், எச்சில் துப்பினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X