அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி

Added : ஜூலை 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு, கருணை அடிப்படையில், அரசு பணிக்கான பணி நியமன ஆணையை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர், இறந்தனர். போலீசார் தாக்கியதில், அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அவர்கள் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு, கருணை அடிப்படையில், அரசு வேலை வழங்கவும், ஜூன், 24ல், முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.அதன்படி, 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, ஜெயராஜ் குடும்பத்தினரிடம், செய்தித்துறை அமைச்சர் ராஜு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, ஜெயராஜ் மகள் பெர்சிஸ் என்பவருக்கு, கருணை அடிப்படையில், இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் ராஜு, எம்.எல்.ஏ., சண்முகநாதன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
28-ஜூலை-202008:30:10 IST Report Abuse
Muthukrishnan,Ram இளகிய மனம் கொண்ட இ.பி.எஸ். அவர்களுக்கும், பரந்த மனம் கொண்ட ஓ.பி.எஸ். அவர்களுக்கும் நன்றிகள் பல. ஆனால் கொலை செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்? எத்தனை ஆண்டுகள் கழித்து?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X