சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 வயது சிறுவன் மீட்பு: போலீசார் விசாரணை

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், மாயமான, நான்கு வயது சிறுவனை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரை சேர்ந்தவர் காஜா மைதீன், 32. பனியன் நிறுவனத்தில், மெர்சன்டைசர். அவரின் இளைய மகன், ஜாவித் அகமது, 4, நேற்று காலை, 9:00 மணியளவில் வெளியே விளையாடி கொண்டிருந்தார். திடீரென காணாமல் போனார்.அவரும், உறவினர்களும் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மகன் மாயமானது குறித்து சில நண்பர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் சிறுவனின் போட்டோ பகிரப்பட்டது. சிறுவனை அனைத்து இடங்களில் தேடி பார்த்து வந்தனர். அதேநேரம், போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே சிறுவன் அழுது கொண்டு நின்றிருந்ததாக பொதுமக்கள் ஒப்படைத்து சென்றனர்.விசாரணையில், காஜமா மைதீனின் மகன் என்பது தெரிந்தது. சிறுவனை அவரிடம் ஒப்படைத்த போலீசார், யார் அழைத்து வந்தது என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X