90 டி.எஸ்.பி.,க்களுக்கு பணி நியமன ஆணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

90 டி.எஸ்.பி.,க்களுக்கு பணி நியமன ஆணை

Added : ஜூலை 28, 2020
Share

சென்னை : டி.எஸ்.பி., உட்பட, பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார்.

 தமிழகத்தில், 2016 -- 19ம் ஆண்டு வரை காலியான, டி.எஸ்.பி., பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 90 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் வழங்கினார் தீயணைப்பு துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்பட்ட, மூன்று பேருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கினார் நெடுஞ்சாலை துறையில், 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, ஐந்து பேருக்கு, பணி நியமன ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் சண்முகம், உள்துறை செயலர் பிரபாகர், டி.ஜி.பி., திரிபாதி, தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X