சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவார பதிகம் பற்றி அவதூறு பரப்பிய கம்யூ., பெண் மீது புகார்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:கோவை, சிவனடியார் திருக்கூடத்தை சேர்ந்த நிர்வாகிகள், மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகார் மனு:கம்யூ., கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி என்பவர், அவர் நடத்தி வரும் கலாட்டா தமிழ் என்ற 'யுடியூப்' சேனலில், தேவார பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் பற்றி,அவதுாறான கருத்துக்களை பேசியுள்ளார். தேவார மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர், மாற்று மதங்களை சார்ந்த பெண்களோடு, தவறான பழக்கம் வைக்கலாம் என்று அவர் கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவர் கூறும் கருத்து தேவாரபதிகத்தில் இல்லை. இந்துக்களுக்கு எதிராக பேசி வரும், சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் நடத்தி வரும் 'யுடியூப்' சேனலை நீக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X