சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 மாடுகள் திடீர் இறப்பு ; 'ஆந்த்ராக்ஸ்' காரணமா?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அரூர் : அரூர் அருகே, 'ஆந்த்ராக்ஸ்' நோய் தாக்குதலால், மாடுகள் இறந்தனவா என்பது குறித்து, கால்நடை மருத்துவர்கள், நேற்று ஆய்வு நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை, பஞ்., பொய்யப்பட்டியில், ஒரு வாரத்தில் கன்றுகள், மாடுகள் என, ஏழு கால்நடைகள் இறந்தன.இதனால், கால்நடை வளர்ப்போர் பீதியடைந்ததுடன், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் மாடுகள் இறந்ததாகவும், இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நேற்று பொய்யப்பட்டிக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் வந்து ஆய்வு நடத்தினார். பின், அரூர் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் வில்வம் தலைமையில், கால்நடை மருத்துவர்கள், இறந்த மாடுகளின் உடற்கூறுகளை ஆய்வு செய்தனர்.

உதவி இயக்குனர் வில்வம் கூறியதாவது:முன்னெச்சரிக்கையாக, மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று இறந்த ஒரு மாட்டின் உடற்கூறு மாதிரிகள், ஆய்வுக்காக தர்மபுரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாடுகள் இறப்பிற்கு, ஆந்த்ராக்ஸ் நோய் கிருமி தாக்குதலா அல்லது வேறு காரணம் உள்ளதா என, ஆய்வு முடிவு வந்த பின், தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X