சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடாத விசைத்தறிகள் 10 லட்சம் பேர் தவிப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கரூர் : தளர்வு அளிக்கப்பட்ட போதும், தமிழகம் முழுதும் விசைத்தறிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால், 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர், ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர், சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில், லட்சக்கணக்கான விசைத்தறிகள் வாயிலாக, பல்வேறு விதமான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.கரூரில் பெட்ஷீட் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், நாமக்கல்லில் லுங்கி, துண்டு, சேலத்தில் சேலை, வேஷ்டி ரகங்கள் உற்பத்தியாகின்றன.ஈரோடு, திருப்பூரில், 10 மற்றும், 20 கவுன்ட் நுால்கள் வாயிலாக, ஏற்றுமதி தரம் வாய்ந்த காடா துணிகள் உற்பத்தியாகின்றன.ஜூன், 1 முதல், ஊரடங்கில் இருந்து, ஜவுளி உள்ளிட்ட, 34 வகையான தொழில்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், மாநிலம் முழுதும் விசைத்தறிகள், எதிர்பார்த்த அளவில் இயக்கப்படவில்லை. இது குறித்து, தொழிலாளர்கள் கூறியதாவது: ஜவுளி ஏற்றுமதி மையங்களான ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில், கொரோனா பாதிப்புடன், மழை, வெள்ளமும் சேர்ந்து விட்டது. இதனால், ஜவுளி கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜவுளி கடைகள் திறக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் பொது முடக்கத்தால், ஜவுளி கடைகளை திறக்கவில்லை.

இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. நெசவாளர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், உற்பத்தியாளர்கள் திணறுகின்றனர்.மாநிலம் முழுதும், 80 சதவீத விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறைமுகமாகவும், நேரிடையாகவும், 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வருமானம் தடைபட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X