சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு மீறல்:22,380 வழக்குகள் பதிவு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு மீறியதாக, 22,380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தில், மார்ச் 25 முதல், ஜூலை 26 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நாட்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. புறநகர் காவல் எல்லைக்குட்பட்ட பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சப்- டிவிசன் பகுதியில், தடை உத்தரவை மீறியதாக 22,380 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 26,551 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19,827 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, 1.88 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது, தடை உத்தரவு மீறியதாக மாவட்டத்தில், 75 வழக்கும், மாநகர பகுதியில், 37 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X