லேப் டெக்னீசியன் பணியில் இருக்கணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லேப் டெக்னீசியன் பணியில் இருக்கணும்: மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
கோவை:கோவையில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் கண்டிப்பாக, லேப் டெக்னீசியன் பணியில் இருக்க, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியதாவது: தனிமைப்படுத்திய பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை

கோவை:கோவையில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் கண்டிப்பாக, லேப் டெக்னீசியன் பணியில் இருக்க, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.'கொரோனா' பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தியதாவது: தனிமைப்படுத்திய பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். எவ்வித தொய்வும் இன்றி, தினமும் இருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.மருத்துவ முகாம் நடைபெறும் இடங்களில், பயிற்சி பெற்ற ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்கள் (லேப் டெக்னீசியன்) கண்டிப்பாக, பணியில் இருக்க வேண்டும்.முன்னெச்சரிக்கையாக, 'கொடிசியா' மையத்தில், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.முக கவசம் அணிந்து வெளியே செல்வது; சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக, ஒலி பெருக்கியில் அறிவிக்க வேண்டும். விதிமுறையை பின்பற்றாதவர்களுக்கு, பறக்கும் படையினர் அபராதம் விதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், போலீஸ் துணை கமிஷனர் அனிதா, இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா, அரசு மருத்துவமனை டீன் (பொ) காளிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X