சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணிக்கடையில் புகுந்து ரகளை: ஸ்டேஷன் எதிரில் அத்துமீறல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 துணிக்கடையில் புகுந்து ரகளை: ஸ்டேஷன் எதிரில் அத்துமீறல்

பல்லடம்:பல்லடத்தில், சிலர் அத்துமீறி கடைக்குள் புகுந்த துணிகளை சேதப்படுத்தியதாக, உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், சுப்பிரமணியம், 67, ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், கடைக்குள் புகுந்த சிலர், பல லட்சம் மதிப்பிலான துணிகளை சேதப்படுத்தியதாக, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:பத்து ஆண்டுகளுக்கு கட்டட உரிமையாளருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திடீரென காலி செய்யுமாறு கூறினர். கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் முடியாது என்பதுடன், ஒப்பந்தப்படி, 3 ஆண்டு இருப்பதால், காலி செய்ய அவகாசம் வேண்டும் என்றேன்.நேற்று முன்தினம் இரவு சிலர், வாடகைக்கு இருக்கும் கட்டடத்தின் மாடியில், அனுமதியின்றி நுழைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று, கடையையும், பல லட்சம் மதிப்பிலான துணிகளையும் சேதப்படுத்தினர்.பல்லடம் போலீசில் புகார் அளித்ததால், அவர்கள் தப்பியோடி விட்டனர். கடை மற்றும் துணிகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X