பொது செய்தி

தமிழ்நாடு

பழனியப்பா பள்ளி மாணவர் அசத்தல்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
 பழனியப்பா பள்ளி  மாணவர் அசத்தல்

அவிநாசி:அவிநாசி, மாமர தோட்டத்தில் இயங்கும் பழனியப்பா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில், தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவர் முத்துகிருஷ்ணன், 590 மதிப்பெண் பெற்று திருப்பூர் கல்வி மாவட்டத்தில் இரண்டாமிடமும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்து சாதனை புரிந்துள்ளார். இவர் தமிழ் பாடத்தில் 99, வணிகவியல், கணக்கு பதிவியல், கணினி அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் சதமடித்துள்ளார்.சிறப்பிடம் பெற்ற மாணவரை, பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார், பள்ளி இயக்குனர் டாக்டர் சதீஸ்குமார், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர், கோப்பை வழங்கி பாராட்டினர். தாளாளர் ராஜ்குமார் கூறுகையில், 'முதலிடம் பெற்ற மாணவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாவதையே தனது உயர் லட்சியமாக கொண்டுள்ளார். அவரின் லட்சியம் நிறைவேற உறுதுணையாக இருப்போம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X