ஒரே நாளில் 5,723 பேர் வீடு திரும்பினர் ; 54 ஆயிரம் பேருக்கு தொடருது சிகிச்சை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 5,723 பேர் வீடு திரும்பினர் ; 54 ஆயிரம் பேருக்கு தொடருது சிகிச்சை

Added : ஜூலை 28, 2020
Share
சென்னை : கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று ஒரே நாளில், 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து, வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 1.62 லட்சமாக உயர்ந்துள்ளது; 54 ஆயிரம் பேருக்கு சிகிச்சை தொடர்கிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 117 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று, 63 ஆயிரத்து, 250 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 6,993

சென்னை : கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று ஒரே நாளில், 5,723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து, வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 1.62 லட்சமாக உயர்ந்துள்ளது; 54 ஆயிரம் பேருக்கு சிகிச்சை தொடர்கிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 117 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று, 63 ஆயிரத்து, 250 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், 6,993 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில், 1,138; செங்கல்பட்டில், 448; கோவையில், 313; கள்ளக்குறிச்சியில், 238; காஞ்சிபுரத்தில், 362; கன்னியாகுமரியில், 239; ராணிப்பேட்டையில், 273 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தேனியில், 280; திருவள்ளூரில், 474; திருவண்ணாமலையில், 267; துாத்துக்குடியில், 349; விருதுநகரில், 338 பேர் என, மாநிலம் முழுதும், 6,993 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை, 24.14 லட்சம் பேருக்கு நடத்திய பரிசோதனையில், இரண்டு லட்சத்து, 20 ஆயிரத்து, 716 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக, சென்னையில், 95 ஆயிரத்து, 857; செங்கல்பட்டில், 12 ஆயிரத்து, 717; மதுரையில், 10 ஆயிரத்து, 57; திருவள்ளூரில், 12 ஆயிரத்து, 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து, நேற்று ஒரே நாளில், 5,723 பேர் குணமாகி வீடு திரும்பிஉள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை, ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 249 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்; 54 ஆயிரத்து, 896 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையைச் சேர்ந்த, 26 வயது வாலிபர் உட்பட, 77 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பால், சென்னையில், 2,032 பேர் உட்பட, 3,571 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 876 720 4செங்கல்பட்டு 12,717 9,180 233சென்னை 95,857 80,761 2,032கோவை 3,775 2,131 42கடலுார் 2,525 1,629 21தர்மபுரி 732 358 3திண்டுக்கல் 2,451 1,692 36ஈரோடு 645 453 8கள்ளக்குறிச்சி 3,303 2,190 21காஞ்சிபுரம் 7,527 4,542 94கன்னியாகுமரி 3,849 1,964 32கரூர் 371 204 9கிருஷ்ணகிரி 776 346 14மதுரை 10,057 7,809 216நாகை 587 325 4நாமக்கல் 556 265 5நீலகிரி 731 514 2பெரம்பலுார் 343 227 3புதுக்கோட்டை 1,715 1,004 21ராமநாதபுரம் 3,094 2,245 59ராணிப்பேட்டை 4,107 2,201 29சேலம் 3,185 2,185 25சிவகங்கை 2,123 1,586 35தென்காசி 1,794 869 15தஞ்சாவூர் 2,160 1,175 18தேனி 4,053 2,042 49திருப்பத்துார் 958 544 10திருவள்ளூர் 12,320 8,108 214திருவண்ணாமலை 5,376 3,893 51திருவாரூர் 1,416 838 1துாத்துக்குடி 5,896 3,428 29திருநெல்வேலி 3,963 2,500 25திருப்பூர் 737 387 7திருச்சி 3,604 2,234 59வேலுார் 5,236 3,992 49விழுப்புரம் 3,270 2,275 32விருதுநகர் 6,302 3,918 63வெளிநாட்டில் இருந்து வந்தோர் 790 654 1உள்நாட்டு விமான பயணியர் 514 438 0ரயிலில் பயணியர் 425 423 0மொத்தம் 2,20,716 1,62,249 3,571/***

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X