சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாப பலி

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : ஆற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், டாக்டராக பணிபுரிகிறார்.இவரது மனைவி அன்பரசி, கச்சிராயபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர். கச்சிராயபாளையத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தம்பதியின் மகன் பத்மசரண், 12; தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார்.பத்மசரண், பொட்டியம் கிராமத்தில், பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். ௯ம் வகுப்பு படிக்கும், மாமா மகள் காயத்ரி, 16, என்பவருடன், நேற்று காலை ஆற்றுக்கு குளிக்க சென்றார்.காயத்ரி துணி துவைத்து கொண்டிருந்தபோது, ஆற்றில் குளித்த பத்மசரண், ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கி தத்தளித்தார். காப்பாற்ற முயன்ற காயத்ரியும் நீரில் மூழ்கினார்.

அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கச்சிராயபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X