பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு கட்டண தள்ளுபடி: தொழில் துறை எதிர்பார்ப்பு 

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

திருப்பூர்:கடன் பதிவுக்கான அவகாசம் நீட்டிப்பு போதாது; முத்திரை தாள் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனாவால், திருப்பூர் ஆடை உற்பத்தி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; நிதி நெருக்கடியில் நிறுவனங்கள் தவிக்கின்றன. புதிய ஆர்டர்களை கையாளுவதற்காக, வங்கிகளிடம் கடன் பெறுகின்றன.கொரோனா நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, கடன் பதிவுக்கான முத்திரை தாள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது.ஆனால், அரசு, முத்திரை தாள் கட்டணத்தை ரத்து செய்யவில்லை. மாறாக, கடன் பதிவுக்கு, அபராதத்துடன் அவகாசம், நான்கு மாதத்திலிருந்து எட்டுமாதமாக நீட்டிக்கப்படுவதாகவும்; அபராதத்துடன், வரும் 2021, மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தொழில் மற்றும் வர்த்தகத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:பத்திர பதிவுத்துறையில், கடன் விவரங்களை பதிவு செய்வதற்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனாவால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இக்கட்டான இந்த சூழலில், கடன் பதிவுக்கான முத்திரை தாள் கட்டணம், நிறுவனங்களுக்கு, நிதிச் சுமையை அதிகரிக்கும்.பாதிப்பிலிருந்து, தொழில் மீண்டெழத்துவங்கியுள்ளது. தொழில் இயல்புநிலைக்கு திரும்புவதற்கு, அரசு உதவி மிக இன்றியமையாததாக உள்ளது. எனவே, கால அவகாசம் நீட்டிப்புக்குபதில், கடன் பதிவுக்கான கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் அல்லது கட்டண தொகையை குறைக்க வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X