பொது செய்தி

தமிழ்நாடு

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 17 மாவட்டங்களில், இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்கள். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில், இன்றும், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், நாளை மறுதினம் வரையும், கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபி கடல் பகுதிகளில், 31ம் தேதி வரையும், பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X