மதுரை : வனத்துறை விசாரணைக்கு சென்று, மர்மமாக இறந்த விவசாயி வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரி, உயர் நீதிமன்ற கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளத்தைச் சேர்ந்த பாலம்மாள் தாக்கல் செய்த மனு:என் கணவர் அணைக்கரை முத்து. தோட்டத்தில் மின் வேலி அமைத்தது குறித்து விசாரிக்க, சில தினங்களுக்கு முன், கடையம் வனச்சரக அலுவலர்கள், என் கணவரை, சிவசைலம் அழைத்துச் சென்றனர்.என் மகன் அங்கு செல்லும்போது, ஆற்றுப்பாலம் அருகே, எதிரில் வனச்சரக ஜீப்பில், என் கணவரை கொண்டு வந்தனர். அவர் மயங்கிய நிலையில் இருந்தார். தென்காசி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது, இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தனர். வனத்துறை அலுவலர்கள் தாக்கியதில், என் கணவர் இறந்துள்ளார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை வழக்குப் பதிய வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியுள்ளார்.நீதிபதி, ஆர்.பொங்கியப்பன், வழக்கை இன்று விசாரிக்க ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE