நீர்வழிப்பாதை அடைப்பு: விவசாயிகள் தவிப்பு| Dinamalar

நீர்வழிப்பாதை அடைப்பு: விவசாயிகள் தவிப்பு

Added : ஜூலை 28, 2020 | |
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே மழைநீர் வழித்தடம் அடைபட்டுள்ளதால், தண்ணீர் வழியிலேயே தேங்கியுள்ளது.வெள்ளகோவிலில் இருந்து, மழை நீர் செல்லும் வழித்தடம் மடாமேடு, சின்னக்கரை, கரட்டுப்பாளையம் வழியாக கரட்டுப்பாளையம் அணைக்கட்டை அடையும். இதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன், 10 லட்சம் ரூபாய் செலவில் அணைக்கட்டு மேம்படுத்தப்பட்டது.அணைக்கட்டில், தண்ணீர் தேங்கினால் நிலத்தடி
 நீர்வழிப்பாதை அடைப்பு: விவசாயிகள் தவிப்பு

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே மழைநீர் வழித்தடம் அடைபட்டுள்ளதால், தண்ணீர் வழியிலேயே தேங்கியுள்ளது.வெள்ளகோவிலில் இருந்து, மழை நீர் செல்லும் வழித்தடம் மடாமேடு, சின்னக்கரை, கரட்டுப்பாளையம் வழியாக கரட்டுப்பாளையம் அணைக்கட்டை அடையும். இதற்காக, இரண்டு மாதங்களுக்கு முன், 10 லட்சம் ரூபாய் செலவில் அணைக்கட்டு மேம்படுத்தப்பட்டது.அணைக்கட்டில், தண்ணீர் தேங்கினால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.ஆனால், தண்ணீர் செல்லாமல் வழியில் தேங்குவதால் அணைக்கட்டை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு பலன் ஏதுமில்லை என, விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர் வழித்தடத்தை சரி செய்து மழைக்காலங்களில் குருக்கபாளையம் அணைக்கட்டு நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X