பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

சென்னை : -தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 40 ஆயிரம் ரூபாயை தாண்டிஉள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, பல நாடுகளில், இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து, தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உலக முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்வதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.கடும் அதிர்ச்சிதமிழகத்தில் சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 4,904 ரூபாய்க்கும்; சவரன், 39 ஆயிரத்து, 232 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 66.90 ரூபாயாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், முந்தைய நாள் விலையிலேயே, ஆபரணங்கள் விற்பனையாகின.இந்நிலையில், நேற்று ஒரே நாளில், தங்கம் கிராமுக்கு, 109 ரூபாய் அதிகரித்து, முதல் முறையாக, 5,000 ரூபாயை தாண்டி, 5,013 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக, 872 ரூபாய் உயர்ந்து, 40 ஆயிரத்து, 104 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும். வெள்ளி விலையும் கிராமுக்கு, 4 ரூபாய் உயர்ந்து, 70.90 ரூபாயானது. ஏப்ரல் முதல் திருமணம் நடத்த இருந்த பலர், ஊரடங்கால், அதை ஒத்தி வைத்து வந்த நிலையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சவரன் தங்கம், 40 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது, திருமண வீட்டார் மற்றும் திருமணம் செய்யும் வயதில் பெண்களை வைத்திருக்கும் பெற்றோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:வளர்ந்த நாடுகளில், வங்கி வைப்பு நிதிக்கான, வட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், வைப்பு நிதியில் பணத்தை முதலீடு செய்யாமல், பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும், பங்குச் சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

பொருளாதார போர் : அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் பொருளாதார போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. மேலும், இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையும், உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழலில், தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது எனக் கருதி, பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கம் மீது பெருமளவில் முதலீடுகள் குவிந்து வருவதே, அதன் விலை அதிகரிப்பிற்கு காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஏழு மாதங்களில்ரூ.10 ஆயிரம் உயர்வுதமிழகத்தில், 2008 மார்ச், 17ல், முதல் முறையாக, சவரன் தங்கம், 10 ஆயிரத்து, 24 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு பின், 2011 ஆக., 18ல் சவரன், 20 ஆயிரத்து, 32 ரூபாய்க்கு விற்பனையானது.தங்கம் விலை, தினமும் காலை, மாலை என, நிர்ணயிக்கப்பட்டாலும், மாலை விலையே, அன்றைய தினத்தின் விலையாக கருதப்படுகிறது. ஒன்பது ஆண்டுகள் கடந்து, 2019 செப்டம்பர், 4ம் தேதி காலை நிலவரப்படி, சவரன் தங்கம், 30 ஆயிரம் ரூபாயை தாண்டி, 30 ஆயிரத்து, 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில், 30 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் குறைந்தது.

பின், அதன் விலை, 30 ஆயிரத்தை தாண்டவில்லை.நடப்பாண்டு ஜன., 3ம் தேதி மாலை, சவரன், 30 ஆயிரத்து, 520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சவரன், 10 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு வர, மூன்று ஆண்டுகளும்; 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு வர, ஒன்பது ஆண்டுகளும் ஆனது. இந்த ஆண்டில், ஏழே மாதங்களில், 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து, 40 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X