பொது செய்தி

தமிழ்நாடு

தினமும் 2,000 லிட்டர் கபசுர குடிநீர்

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

மதுரை, : மதுரையில் தினமும், 2,000 லிட்டர் கபசுர குடிநீரை காய்ச்சி, மக்களுக்கு வினியோகிக்கும் குடும்பத்திற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, மதுரை மாநகராட்சிக்கு தன்னார்வலர்களின் உதவி தேவைப்பட்டது. சேவை மனப்பான்மை கொண்ட அபராஜிதா, 17, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் உதவ முன்வந்தனர். 'தினமும், 200 லிட்டர் கபசுர குடிநீர் காய்ச்சி தர வேண்டும்' என, மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் மாணவியின் குடும்பமோ தினமும், 2,000 லிட்டரை காய்ச்சி கொடுத்து, அபார பங்களிப்பை வழங்கி வருகிறது

.அபராஜிதாவின் தந்தை கண்ணன், 'மை மதுரை' பள்ளி இயக்குனர், தாய் கீதா, பள்ளி தாளாளர். டி.வி.எஸ்., நகரில் வசிக்கின்றனர். வீட்டில் கபசுர குடிநீர் காய்ச்சி, மாநகராட்சிக்கு வழங்குகின்றனர்.இவர்களின் பணியை, கமிஷனர் விசாகன் பாராட்டினார்; உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் வாழ்த்தையும் பெற்றுள்ளனர்.கண்ணன் கூறுகையில், ''கபசுர குடிநீருக்கான பொடி, தண்ணீர், காஸ் போன்றவற்றை மாநகராட்சி தருகிறது. நாங்கள் காய்ச்சி வழங்குகிறோம். வீட்டருகே கபசுர குடிநீர், 'கவுன்டர்' திறந்துள்ளோம். இங்கு தினமும், 150 லிட்டர் காலியாகிறது. எங்கள் பணி துவங்கி, 73 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன,'' என்றார்.கீதா கூறுகையில், ''ஜெய்ஹிந்த்புரத்தில், ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் மையம் திறக்க இருக்கிறோம்.

கொரோனா ஓயும் வரை, விடுவதாக இல்லை. இப்பணியை விரிவுபடுத்த உள்ளோம்,'' என்றார்.மேலும், மாநகராட்சி, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும், நோய் எதிர்ப்பு மருந்து பெட்டகத்தை வாங்கி, மக்களுக்கு வினியோகித்துள்ளனர். இதுவரை, 1.50 லட்சம் மருந்து பெட்டகங்களை வாங்கியுள்ளனர். 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களை வாழ்த்த, 98421 85333 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X