பொது செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை முறையில் மாற்றம்: தொற்று தவிர்க்க ஏற்பாடு

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

அவிநாசி:கொரோனா தொற்று பரவலை தவிர்க்க, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவ சிகிச்சை முறையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தாலுகா மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர், செவிலியர் உள்ளிட்ட பணியாளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அரசு மருத்துவமனைகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசு மருத்துவர்கள் கூறியதாவது:வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோரில், 60 சதவீதம் பேர், 60, 65 வயதை கடந்தவர்கள். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ மருத்துவமனைக்கு வந்து, மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர்.அவர்களுக்கு, கூடுதலாக ஓரிரு மாதத்துக்கு, தேவையான மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. வயதானோர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். இது, தொற்று பரவலை குறைக்க உதவும்.இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X