கேரள தங்க கடத்தல் வழக்கு: ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் 9 மணி நேரம் விசாரணை

Updated : ஜூலை 28, 2020 | Added : ஜூலை 28, 2020
Share
Advertisement
கேரள தங்க கடத்தல், வழக்கு ஐ.ஏ.எஸ்.,  9 மணி நேரம் விசாரணை

கொச்சி :தங்கம் கடத்தல் விவகாரத்தில், கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news




இது தொடர்பாக, துாதரகத்தில் பணியாற்றி வந்த சரித், முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், அவருடைய கூட்டாளி சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில், முதல்வரின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலராக இருந்த, சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அவர் இந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.தங்கம் கடத்தல் தொடர்பாக, சிவசங்கரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர்.

அதுபோல், சுங்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில், நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்த விசாரணையில், தங்கம் கடத்தல் தொடர்பாக, சிவசங்கரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.இந்த கடத்தல் கும்பலுக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X