சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை குறைப்பு அரசு நடவடிக்கை எடுக்குமா?

Added : ஜூலை 28, 2020
Share
Advertisement

''தனியார் பால் நிறுவனங்கள் விலை குறைப்பால், உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் கூறினார்.

அவர் கூறியதாவது:ஆவின் நிறுவனம், 4 சதவீதம் கொழுப்பு சத்து, 8 சதவீதம் இதர சத்துகள் அடங்கிய பால், ௧ லிட்டர், 29.40 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.அதே அளவு விலையில், கொள்முதல் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், 21ம் தேதி முதல், விலையை அதிரடியாக குறைத்தன.தமிழகத்தில் இயங்கும், 10க்கும் மேற்பட்ட தனியார் பால் நிறுவனங்கள், 20.40 முதல், 26.90 ரூபாய் வரையே கொள்முதல் செய்கின்றன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பால் நிறுவனங்களின் விலை குறைப்பால், உற்பத்தியாளர்கள், ஆவினுக்கு பால் வழங்குவதை அதிகரித்துள்ளனர். ஆவின் பால் கொள்முதல், 29.50 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது, 40.50 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.கடந்த நான்கு மாதங்களில், ஆவின் பால் கொள்முதல், 11 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ள நிலையில், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஆவின் நிர்வாகம், பாலை ஏற்க மறுக்கிறது.பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையை உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஆவின் மோசடி: விசாரிக்க கோரிக்கைமதுரை ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருமங்கலம் மேலாளர் மற்றும், ஆறு பொறுப்பாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் பொன்னுச்சாமி கூறியதாவது:சஸ்பெண்ட் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மதுரையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுதும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். 25 ஆவின் ஒன்றியங்களில் கொள்முதல் செய்யும் பாலில், விற்பனை போக, உபரியை சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை ஆவினுக்கு அனுப்பி பவுடராக மாற்றி இருப்பு வைப்பது வழக்கம்.

ஆனால், திருச்சி ஆவினில், நடைமுறைக்கு மாறாக, விழுப்புரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பவுடராக மாற்ற ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X