பேக்கேஜிங் டெண்டர் பஞ்., தலைவர்கள் எதிர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேக்கேஜிங் டெண்டர்' பஞ்., தலைவர்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 28, 2020
Share

மதுரை : ''மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக, பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு புறம்பாக, மாநில அரசு, பேக்கேஜிங் டெண்டர் முறையை பின்பற்றினால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பு மாநில தலைவர், முனியாண்டி கூறியதாவது: கிராம ஊராட்சி நிதியை, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற்று, ஒப்பந்தப் புள்ளி கோரி, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக, பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு புறம்பாக, கிராம சபை தீர்மானம் இல்லாமல், தலைவர்களுக்கு தெரியாமல், பேக்கேஜிங் டெண்டர் முறையில், பணிகளுக்கு, மாநில அரசு டெண்டர் விடுகிறது.அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கும், மத்திய அரசின், 'ஜல் ஜீவன்' அபியான் திட்டத்திலும் தலைவர்களை புறக்கணித்துள்ளது.

மாநில அரசு, இந்த நிலைப்பாட்டை மாற்றாவிடில், ஊராட்சி அலுவலகங்களை பூட்டி, கலெக்டரிடம் சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X